இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம் – அம்மாவுக்காக வேலையை துறந்த மகன்

இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம் – அம்மாவுக்காக வேலையை துறந்த மகன்

  • local
  • August 29, 2023
  • No Comment
  • 17

புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் தனது தாயைப் பார்க்க அனுமதி வழங்கப்படாமையால் சேவையை விட்டு வெளியேறிய பொலிஸ் அதிகாரி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பயிலுனர் கான்ஸ்டபிள் ஒருவர் நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்க விடுமுறை வழங்கப்படாத காரணத்தினால் பணியிலிருந்து விலகியுள்ளார்.

பொலன்னறுவை, புலஸ்திகம பிரதேசத்தில் வசிக்கும் பொலிஸ் கான்ஸ்டபிளே இந்த முடிவை எடுத்துள்ளார்.

விடுமுறை
பணிக்கு வந்து 60 நாட்களாகியும் விடுமுறை எடுக்காமல் தனது கடமைகளை செய்ததாகவும், அதன்போது தனது தாய் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து விடுமுறைக்கு விண்ணப்பித்தும் விடுமுறை வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தை அவர் பொலிஸ் தகவல் புத்தகத்திலும் பதிவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலைமையினால் தனது கடமைகளை மேற்கொள்ள மனதளவில் தயார் இல்லையெனவும் அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply