யாழில் கோர விபத்து: பாடசாலை மாணவன் பலி

யாழில் கோர விபத்து: பாடசாலை மாணவன் பலி

  • local
  • August 14, 2023
  • No Comment
  • 63

யாழ்ப்பாணம் தென்மராட்சி, சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (13.08.2023) 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச்சென்ற கனரக லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

யாழ்.இந்து கல்லூரியின் உயர்தர மாணவன்
இவ்விபத்தில் யாழ்.இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் கண்டுவில் வீதி சாவகச்சேரியை சேர்ந்த 19 வயதான சிவபாலன் பிரவீன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனின் சடலம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply