கவினின் அடுத்த திரைப்படங்களின் இயக்குனர்கள் இவர்களா?

கவினின் அடுத்த திரைப்படங்களின் இயக்குனர்கள் இவர்களா?

  • Cinema
  • September 27, 2023
  • No Comment
  • 20

சரியாக அமைந்திருக்கும் இந்த வாய்ப்பினை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டால் வளர்ந்து வரும் நாயகனாக இருக்கும் கவின், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் நாயகனாக இருப்பார்.

தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து, அங்கு நிலைத்து நிற்பது என்பது அவ்வளவு சாதாரணம் அல்ல. பாலிவுட்டில் ஷாருக் கான் தொடங்கி ஆயுஷ்மான் குர்ரானா வரை பல உதாரணங்கள் சொல்லலாம்.

ஆனால், தமிழ்நாட்டில் அப்படியில்லை. அதனால்தான், சிவகார்த்திகேயனின் வெற்றி எல்லோராலும் கொண்டாடப்பட்டது; கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியில் ஜொலித்தவர்கள் சினிமாவில் சோபிக்காமல் போன வரலாறும் இருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் அமைத்துக் காட்டிய பாதைதான் இன்று பலருக்கு இன்ஸ்பிரேஷன். அந்த வழியில் கவின் சிறப்பாக தனது கரியரை வடிவமைத்துக் கொண்டு வருகிறார்.

‘நட்புனா என்னானு தெரியுமா’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார் கவின். ஆனால், அந்தப் படமோ நீண்ட இழுபறிக்குப் பின் தான், வெளியானது. இருந்தும் படம் கவனிக்கப்படாமல் போகவில்லை. அதன் பின், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போய்விட்டு வந்தார் கவின். அந்த நிகழ்ச்சியில் நடன இயக்குநர் சாண்டி, முகென் ராவ் ஆகியோருடன் சேர்ந்து ‘We are the Boysu’ என எண்டர்டெயின் செய்தார். வெளியே வந்த கொஞ்ச நாள்களில் ‘லிஃப்ட்’ திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரது நடிப்பும் பாரட்டப்பட்டது.

மூன்றாவது படமாக, ‘டாடா’. மிகப்பெரிய ஹிட். படமாகவும் சரி, கவினின் நடிப்பும் சரி அனைவராலும் ரசிக்கப்பட்டது, பேசப்பட்டது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகன் என்ற டேகிற்குள் வந்துவிட்டார் கவின். இந்தப் படம் ஹிட்டானவுடன் அடுத்தடுத்து என பரபரக்க ஓடாமல், தன்னுடைய அடுத்த அடியை மிக நிதானமாக எடுத்து வைக்கிறார். ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ என்ற படத்தை முடித்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை. அடுத்ததாக, நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கவின் தான் ஹீரோ. அதனை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கவினுக்கு ஜோடியாக ‘அயோத்தி’ படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பும் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் இயக்குநராக களமிறங்குகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது. அந்தப் படத்திலும் கவின் தான் ஹீரோவாம். இந்த ஆண்டு இறுதியில் ஷூட்டிங் தொடங்க இருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அல்லது யுவன் இசையமைக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். சஞ்சய், யுவன் ஷங்கர் ராஜாவின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, இயக்குநர் நெல்சனின் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் கவின். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

இதன் தொடர்ச்சியாக, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் நடிக்க கவினிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள். துருவ் விக்ரம் படத்தை முடித்துவிட்டு, தனுஷ் படத்திற்குச் செல்வதற்குள் கவினை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘டாடா’வின் வெற்றி கவினை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றுகொண்டிருக்கிறது. சரியாக அமைந்திருக்கும் இந்த வாய்ப்பினை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டால் வளர்ந்து வரும் நாயகனாக இருக்கும் கவின், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் நாயகனாக இருப்பார் என்பதில் மாற்று கருத்தில்லை.

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply