விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பை மீறிய யாழ் இளைஞன் – சென்னை விமான நிலையத்தில் குழப்பம்

விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பை மீறிய யாழ் இளைஞன் – சென்னை விமான நிலையத்தில் குழப்பம்

  • local
  • August 17, 2023
  • No Comment
  • 12

சென்னை விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஏழு அடுக்கு பாதுகாப்பையும் மீறி நுழைந்த யாழ்ப்பாண இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஏழு அடுக்கு பாதுகாப்பையும் மீறி நுழைந்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு சோதனை
இந்த இளைஞன் திங்கட்கிழமை (14) இரவு விமானடிக்கெட், சிறப்பு அனுமதி அட்டை எதுவும் இல்லாமல், விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளைக் கடந்து, குடியுரிமை சோதனை நடக்கும் இடத்தில் சுற்றித்திரிந்துள்ளார்.

இதன் பின்னர் இரவு 10 மணி அளவில் குடியுரிமை அலுவலக கவுன்ட்டர் பகுதியில் ஊழியர் ஒருவரின் கையடக்க தொலைபேசியை திருட முயன்றதையடுத்து, அந்த இளைஞனை பிடித்து அதிகாரிகள், விமான நிலையமேலாளர் அறையில் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது விசாரணையில், அவர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தினேஷ் ஞானசூரியன் (35) என்பதும், 3 மாத விசாவில் இலங்கையிலிருந்து சென்னை வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply