குவைத்தில் சிக்கித்தவித்த 54 பெண்கள்! இலங்கை தூதரகம் எடுத்துள்ள நடவடிக்கை

குவைத்தில் சிக்கித்தவித்த 54 பெண்கள்! இலங்கை தூதரகம் எடுத்துள்ள நடவடிக்கை

  • local
  • August 17, 2023
  • No Comment
  • 18

குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 54 இலங்கை வீட்டுப்பணியாளர்கள் இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் பேரில் நேற்று (16) நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரம், பொலன்னறுவை, காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நடவடிக்கை
இந்நிலையில், நோய், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் விசா காலாவதியானமை ஆகிய காரணங்களால் அவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் அவர்களுக்கு தற்காலிக கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவர்கள் தங்கள் பிரதேசங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து செலவுகளை வழங்கியுள்ளது.

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply