Jadeja: “இந்திய வீரர்கள் யாரிடமும் ஈகோவோ, ஆணவமோ இல்லை”- கபில் தேவிற்கு பதிலடி கொடுத்த ஜடேஜா

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில்தேவ் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்திருந்தார். “ ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடுவதன் மூலம் இந்திய வீரர்கள் அதிக பணத்தை சம்பாதிக்கிறார்கள். பணம் வரும்பொழுது ஈகோவும், திமிரும் சேர்ந்து வருகிறது. தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று இந்திய அணியின் வீரர்கள் நினைக்கிறார்கள். ஐபிஎல் தொடருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, இந்திய அணிக்காக அளிக்க வேண்டும். சுனில் கவாஸ்கர் மாதிரியான ஜாம்பவான்களிடம் யாரும் ஆலோசனை கேட்பதில்லை” என்று விமர்சித்திருந்தார்.
9
ஆனால் கபில் தேவ் கூறுவதுபோல இந்திய வீரர்கள் யாரிடமும் ஈகோவோ, ஆணவமோ இல்லை. எங்கள் அணியில் எல்லோரும் கிரிக்கெட்டை ரசிக்கிறார்கள். எல்லோருமே கடினமாக உழைக்கிறோம்.யாரும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எல்லோரும் தங்களின் 100 சதவிகிதத்தைக் களத்தில் கொடுக்கிறோம். இந்திய அணி தோல்வியடையும்போது இதுபோன்ற கருத்துகள் வரும். என்னை பொறுத்தவரை இந்திய அணி சிறப்பாகதான் செயல்படுகிறது. இந்தியாவிற்காக விளையாடுவதுதான் எங்களின் நோக்கம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Related post

நாட்டு மக்களுக்கு மத்திய வங்கியின் மகிழ்ச்சியான தகவல்

நாட்டு மக்களுக்கு மத்திய வங்கியின் மகிழ்ச்சியான தகவல்

கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் பதிவான 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன், அடுத்த 12 மாதங்களில் இலங்கை பொருளாதாரத்தில் சாதகமான வளர்ச்சி காணப்படும் என இலங்கை மத்திய வங்கியின்…
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி…

Leave a Reply