உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளிவரவுள்ள அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளிவரவுள்ள அறிவிப்பு

  • local
  • September 20, 2023
  • No Comment
  • 17

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விரைவில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று(19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பிற்போடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன முன்வைத்த யோசனைக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரோகிணி கவிரத்னவின் யோசனை

“உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை நடாத்த முடியும்.

அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படலாம் என்றும், அடுத்த வருட(2024 ஆண்டுக்குரிய) உயர்தரப் பரீட்சை வழமைபோல் நடத்தப்படலாம்” என்றும்  ரோகிணி கவிரத்ன யோசனையை முன்வைத்தார்.

கல்வி அமைச்சரின் பதில்

அதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், யோசனையை ஏற்றுக்கொண்ட போதிலும், இறுதி முடிவு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் உள்ளது என்று வலியுறுத்தினார்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் உடனடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிடுமாறு கோரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply