மக்களை ஏமாற்றியிருந்தால் எம்மை சிறையில் அடைக்க வேண்டும்! அனுரகுமார பகிரங்க சவால்

மக்களை ஏமாற்றியிருந்தால் எம்மை சிறையில் அடைக்க வேண்டும்! அனுரகுமார பகிரங்க சவால்

  • local
  • August 22, 2023
  • No Comment
  • 75

சிலர் கூறுவது போல் தாம் ஒரு சதவீதமேனும் மக்களை ஏமாற்றியிருந்தால், தம்மை சிறையில் அடைக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அனுரகுமார நினைவுப்படுத்தும் விடயம்
அத்துடன் ஜே.வி.பி கடல் கடந்த கணக்குகளை பராமரித்து வருவதாக சிலர் கூறுவதாகவும், அத்துடன் தம்மை குறைந்தபட்சம் ஒரு நாளாவது சிறையில் அடைக்க வேண்டும் என அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளதாகவும் அனுரகுமார நினைவுப்படுத்தியுள்ளார்.இந்த நிலையில் “தாமோ தமது கட்சியை சேர்ந்த எவருமோ ஒரு சதவீதமேனும் மக்களை ஏமாற்றியதில்லை, அப்படிச் செய்திருந்தால், இன்று அரசியல் செய்ய முடியாது. எதிர்காலத்தில் ஜே.வி.பிக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுக்கள், வாய்மொழி தாக்குதல்கள் மற்றும் சேறு பூசுவதை எதிர்பார்க்கலாம்” என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாட்டின் அரசியல் பாதையை மாற்றும் ஜே.வி.பியின் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆபத்து குறித்து எச்சரிக்கை
அதேவேளை “நாட்டில் இதுவரை இரண்டு அரசியல் முகாம்களுக்குள் மட்டுமே அதிகாரப் பரிமாற்றம் நடந்தது. இப்போது இரண்டு பிரதான முகாம்களும் ஒரே பக்கம் இருப்பதால் அதிகாரம் கடத்தப்படவுள்ளது.ரணில் விக்ரமசிங்க மட்டுமல்ல நாமல் ராஜபக்ச, அமைச்சர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் போன்ற சகல அரசியல்வாதிகளின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளது” என்றும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply