நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்

நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்

  • healthy
  • October 25, 2023
  • No Comment
  • 18

“நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். இதயத்துக்கும் நல்லது. நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும். நம் உடம்பில் வளர்சிதை மாற்றம் நிகழும்போது ஒவ்வொரு செல்லில் இருந்தும் கழிவுகள் வெளியேறும். இந்தக் கழிவுகள் வெளியேறவில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்படுவதில் ஆரம்பித்து புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பெரிய நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து மேலே சொன்ன பிரச்னைகள் வராமல் தடுப்பவை.

பெரிய நெல்லி சாப்பிட்டால் சளி பிடிக்குமா?
பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பெரும்பாலோனோர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இதில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தி நம் உடம்பில் இருக்கிற கபத்தை வெளியேற்றும், அதைத்தான் நாம் சளி பிடித்துக்கொண்டதாக நினைக்கிறோம். ஆனால், இரவு நேரத்தில் நெல்லிக்காய் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு ஏற்படும்.

குழந்தைகளுக்கு பெரிய நெல்லிக்காயை எப்படிக் கொடுக்கலாம்?
குழந்தைகளுடைய வாட்டர் பாட்டிலில் ஒரு நெல்லிக்காயை கட் பண்ணிப் போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி விடலாம். நெல்லிக்காய் ஊறிய இந்தத் தண்ணீரைக் குடித்தாலே குழந்தைகளுக்குப் போதுமான வைட்டமின் `சி’ கிடைத்துவிடும். ஆனால், குழந்தைகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் நெல்லிக்காய் சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இதில் கவனமாக இருங்கள்!
நெல்லிக்காய் சாறு ரத்தத்தில் சர்க்கரை அளவையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் என்பதால், இந்தப் பிரச்னைகளுக்கு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், ஓர் இயற்கை மருத்துவரிடம் தினசரி எத்தனை நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என்பதைக் கேட்டு தெரிந்துகொண்டு அதன் பிறகு சாப்பிடலாம்.

Related post

அசைவத்திலிருந்து சைவ உணவுக்கு மாறியதும் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

அசைவத்திலிருந்து சைவ உணவுக்கு மாறியதும் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

அசைவ உணவுகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சாதம், காய்கறிகள் இவற்றுடன் சிக்கன், முட்டை, மீன் என புரதச்சத்து நிறைந்த உணவுகளைப் பிரதானமாக சாப்பிட்டுப் பழகியிருப்பீர்கள். புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடும்போது அடிக்கடி…
இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது

இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது

வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால், அதில்…
தொப்பை  குறையணுமா? அப்போ இதை இப்படி சாப்பிடுங்கள்

தொப்பை குறையணுமா? அப்போ இதை இப்படி சாப்பிடுங்கள்

தொப்பையை குறைக்க நம் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஜிம் செல்கிறோம், கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறோம். எனினும் சில இயற்கையான வழிகளிலும் தொப்பையை குறைக்கலாம். மருத்துவகுணங்கள் நிறைந்த சீரகம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *