ஜி20 மாநாட்டுக்கு அழைப்பு: மோடிக்கு பதில் வழங்கிய புடின்

ஜி20 மாநாட்டுக்கு அழைப்பு: மோடிக்கு பதில் வழங்கிய புடின்

  • world
  • August 29, 2023
  • No Comment
  • 37

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இயலாதது குறித்து பிரதமா் நரேந்திர மோடியிடம் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதின் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலாக ரஷ்ய தரப்பில் வெளியுறவு அமைச்சர் சொ்கேய் லாவ்ரோவ் பங்கேற்பாா் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா தலைமை வகிக்கும் நிகழாண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு, வரும் செப்டம்பா் 9, 10-ஆம் திகதிகளில் தலைநகா் தில்லியில் நடைபெற உள்ளது.

இதில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், சீன அதிபா் ஷி ஜின்பிங், சவூதி அரேபிய இளவரசா் முகமது பின் சல்மான் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.

உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை
அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் புடின் பங்கேற்காத நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிலும் அவா் பங்கேற்க மாட்டாா் என்பது தெரியவந்துள்ளது.

உக்ரைன் மீதான மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை காரணமாக அவா் இந்த முடிவை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை ஜி20 மாநாட்டில் தன்னால் பங்கேற்க இயலாதது குறித்தும், இந்த முடிவைப் புரிந்துகொண்டதற்கு பிரதமருக்கு நன்றியையும் அதிபா் புதின் தெரிவித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…
கொலராடோவில் நடந்த துப்பாக்கிச் சூடு -, ‘பாலஸ்தீனத்தை விடுவிப்போம்’ என்று கூச்சலிட் ட  சந்தேகநபர்

கொலராடோவில் நடந்த துப்பாக்கிச் சூடு -, ‘பாலஸ்தீனத்தை விடுவிப்போம்’ என்று கூச்சலிட்…

கொலராடோவில் இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில், “பாலஸ்தீனத்தை விடுவிப்போம்” என்று கூச்சலிட்ட ஒருவர் மொலோடோவ் காக்டெய்ல்களை வீசியதில் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டென்வரில் இருந்து சுமார்…
ட்ரம்ப் – எலான் மஸ்க் நட்பில் விரிசலா?

ட்ரம்ப் – எலான் மஸ்க் நட்பில் விரிசலா?

‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இடையே மனக்கசப்போ?’ என்கிற கேள்வி நேற்று முன்தினத்தில் இருந்து உலகில் வட்டமடித்து வருகிறது. ‘ஒரு ஸ்ட்ரைட் ஆண் மற்றொரு…

Leave a Reply