புலம்பெயர்வோரை தடுப்பதற்காக 500 மில்லியன் டொலர்களை பெற்ற பிரான்ஸ்: அதிருப்தியில் பிரித்தானியா

புலம்பெயர்வோரை தடுப்பதற்காக 500 மில்லியன் டொலர்களை பெற்ற பிரான்ஸ்: அதிருப்தியில் பிரித்தானியா

  • world
  • August 15, 2023
  • No Comment
  • 30

ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக, பிரான்ஸிற்கு 500 மில்லியன் டொலர்களை பிரித்தானியா வழங்கியுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியா வழங்கிய 500 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டு, பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக பிரான்ஸ் செய்துள்ள செயல் பிரித்தானியாவுக்கு அதிர்ருப்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பிரான்ஸிலிருந்து ஆங்கிலக் கால்வாய்க்குள் செல்லும், Canche என்னும் நதியில், மீன் பிடிக்கும் வலைகள் தண்ணீரில் மூழ்கிவிடாமல் மிதப்பதற்காக பயன்படும் மிதவைகளை சேர்த்துக் கட்டி, அந்தக் கயிற்றின் இரண்டு ஓரங்களிலும் கற்களை இணைத்து வைத்துள்ளது பிரான்ஸ் தரப்பு.

கேலி செய்யும் கடத்தல்காரர்கள்

அதாவது, பிரான்ஸிலிருந்து ஆங்கிலக்கால்வாய் நோக்கி பயணிக்கும் கடத்தல்காரர்களின் படகுகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரான்ஸின் இந்த நடவடிக்கையானது பிரித்தானிய நாடாளுமன்றில் பெரும் வாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கமைய, “பிரான்ஸ் Canche நதியில் அமைத்துள்ள தடுப்பு, ஒரு வாத்தைக் கூட தடுக்காது” என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான Clarke-Smith தெரிவித்துள்ளார்.

இது மொத்த அமைப்பையும் கேலி செய்வது போல் அமைந்துள்ளதுடன், ஆங்கிலக்கால்வாயில் உயிரிழப்புகள் அதிகரிக்கவும் வழிவகை செய்யும் எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும், கடத்தல்காரர்கள் பிரான்ஸின் இந்த செய்கையைக் கண்டால்,கேலி செய்வார்கள் என கூறியுள்ளார்.

பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கிப் சென்ற புலம்பெயர்ந்தோர் படகொன்று கடந்த சனிக்கிழமை, ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்ததில், ஆறு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply