ஈரான் பயங்கரவாத தாக்குதலில் நால்வர் பலி

ஈரான் பயங்கரவாத தாக்குதலில் நால்வர் பலி

  • world
  • August 14, 2023
  • No Comment
  • 43

ஈரானில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதல் நடவடிக்கையானது நேற்றையதினம்(13.08.2023) ஈரானின் ஷிராஸில் நகரில் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட நபர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பதில் தாக்குதல்
மேலும், குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஆனால் கடந்த அக்டோபரில் இஸ்லாமிய அரசு 15 பேரைக் கொன்ற சம்பவத்திற்கான பதில் தாக்குதலாக இந்த தாக்குதல் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

ஈரானின் நாடாளுமன்றம் மற்றும் இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா கொமேனியின் கல்லறையை குறிவைத்து 2017 இல் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு உட்பட ஈரானில் முந்தைய தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அரசு உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply