மட்டக்களப்பில் யானை தாக்கி கடற்றொழிலாளர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் யானை தாக்கி கடற்றொழிலாளர் உயிரிழப்பு

  • local
  • August 14, 2023
  • No Comment
  • 14

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் புத்தம்புரி குளத்திற்கு கடற்றொழிலுக்காக சென்றவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (13.08.2023) காலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மயிலவெட்டுவானை சேர்ந்த 42 வயதுடைய கடற்றொழிலாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை

குறித்த நபர் நேற்று இரவு (12.08.2023) கடற்றொழிலில் ஈடுபட சென்றுள்ளார்.

இதனையடுத்து வீடுதிரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தேடி சென்றபோது குளத்துக்கு அருகாமையில் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் சடமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply