உக்ரைனுக்கு F-16 போர் விமானங்கள்: கூட்டிணையும் இரு நாடுகள்

உக்ரைனுக்கு F-16 போர் விமானங்கள்: கூட்டிணையும் இரு நாடுகள்

  • world
  • August 21, 2023
  • No Comment
  • 34

நெதர்லாந்தில் இருந்து F-16 போர் விமானங்களை பெற்றுக்கொள்வதற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவை சந்தித்துள்ளார்.

உக்ரைன் இராணுவத்திற்காக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அதிநவீன போர் விமானம் அமெரிக்காவின் ஒப்புதலுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறித்த சந்திப்பின்போது ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் உக்ரைனுக்கு F -16 விமானங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய அரசாங்க ஒப்புதல் வழங்கியிருந்தன.

நெதர்லாந்து டென்மார்க் கூட்டணி
இதன் பிரகாரம் இரு நாடுகளும் தற்போது உக்ரைனுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன.இதற்கமைய உக்ரைனுக்கு ஆதரவு வழங்க நெதர்லாந்து மற்றும் டென்மார்க் அரசாங்கங்கள் ஒரு கூட்டணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் விமானிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படும் என டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் ஜாகோப் எல்லெமன்-ஜென்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வார தொடக்கத்தில் டென்மார்க் மற்றும் நெதர்லாந்து தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் இந்த ஒப்புதலுக்கான விடயங்களை சுட்டிக்காட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply