இந்த ஆண்டு இலங்கையில் இவ்ளோ நிலநடுக்கங்கள் பதிவா?

இந்த ஆண்டு இலங்கையில் இவ்ளோ நிலநடுக்கங்கள் பதிவா?

  • local
  • September 27, 2023
  • No Comment
  • 40

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 16 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 06 புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

நேற்று முன்தினம் இரவு மொனராகலை – புத்தல பிரதேசத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன், ரிக்டர் அளவுகோலில் 2 அலகுகளாகவும் 4 தசமங்களாகவும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இது பூமியின் மேற்பரப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் நடந்தது.

அதிர்வுகள்

நாட்டில் நிறுவப்பட்டுள்ள நான்கு நில அதிர்வு அளவீடுகளிலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.கடந்த காலங்களில் புத்தல மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பல தடவைகள் லேசான நில அதிர்வுகள் பதிவாகியிருந்தது. 

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply