கருவளையம் நிரந்தரமாக நீங்க வேண்டுமா? அதற்கான ஒரு சில டிப்ஸ் இதோ

கருவளையம் நிரந்தரமாக நீங்க வேண்டுமா? அதற்கான ஒரு சில டிப்ஸ் இதோ

கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

இதற்கு முக்கிய காரணம், கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவதுதான்.

முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையம் மற்றும் கரும்புள்ளியை நிறைந்தரமாக நீக்க சில டிப்ஸ்களை பார்ப்போம்.

கருவளையத்தை எப்படி நீக்குவது?
கண்களை அடிக்கடி நீரில் கழுவுவதும், அடிக்கடி நீர் குடித்துக்கொண்டு இருப்பதும் கருவளையத்தை போக்க முக்கியமா ஒரு விஷயம்.

பின், கண்களில் அடிக்கடி மசாஜ் செய்வதும், குறைந்தது 8 மணி நேரம் தூங்கி எழுவதும் கருவளையத்தைச் சரிசெய்ய முக்கியமானதாக இருக்கிறது.

கருவளையம் ஏற்பட்ட பகுதிகளில் பச்சை வாழைப்பழத்தின் தோலில் விளக்கெண்ணெயினை ஊற்றி , கண்களைச் சுற்றி மஜாஜ் செய்யலாம்.

உருளைக்கிழங்கு சாறினை எடுத்து கருவளையம் இருக்கும் பகுதியில் மஜாஜ் செய்துவரலாம்.

வெண்ணெய்யுடன் மஞ்சள் தூள், ஆரஞ்சு சாறு கலந்து பேஸ்ட் செய்து, கருவளையம் இருக்கும் பகுதியில் தேய்த்தால் விரைவில் கருவளையம் குணமாகும்.

புதினா சாறு மற்றும் கேரட் சாறை எடுத்துக்கொண்டு, கண்களைச் சுற்றி தடவி வர கருவளையம் நீங்கும். கூடிய சீக்கரம் நீங்கும்.

வெள்ளரிக்காயை தினமும் கண்களைச் சுற்றி வைத்துவிட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

கண்களை சுற்றி பாதாம் எண்ணெயினை தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, ஈரமான பஞ்சினால் துடைக்கவும்.

குறிப்பாக வைட்டமின் A,C, K மற்றும் E மற்றும் இரும்பு போன்ற வைட்டமின்களை உணவில் எடுத்துக்கொள்ள கருவளையங்கள் குறையும்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…

Leave a Reply