நைஜரில் ஜனநாயக ஆட்சி கவிழ்ப்பு! அதிகாரத்தை கைப்பற்றி அதிரடி காட்டும் இராணுவம்

நைஜரில் ஜனநாயக ஆட்சி கவிழ்ப்பு! அதிகாரத்தை கைப்பற்றி அதிரடி காட்டும் இராணுவம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து, இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி முகமது பாசும் (Mohamed Bazoum) கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி Mohamed Bazoum ஐ மீண்டும் அப்பதவியில் அமர்த்துவதற்காக விடுக்கப்பட்டுவரும் அழுத்தங்களுக்கு அடிபணியபோவதில்லை என்று நைஜர் இராணுவ ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்

இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில், இராணுவ ஜெனரல் Abdourahamane Tiani,தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய போது, தங்களது உள்நாட்டு விவகாரத்தில் அண்டை நாடுகள், சர்வதேச சமூகங்கள் தலையிட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.மேலும், இராணுவப்புரட்சியை அடுத்து நைஜருக்கு மின் விநியோகத்தை அண்டை நாடான நைஜீரியா நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply