என்னையும் அட்ஜெஸ்மெண்ட்க்கு கூப்பிட்டாங்க – நடிகை விஜயலட்சுமி ஆதங்கம்!

என்னையும் அட்ஜெஸ்மெண்ட்க்கு கூப்பிட்டாங்க – நடிகை விஜயலட்சுமி ஆதங்கம்!

  • Cinema
  • August 23, 2023
  • No Comment
  • 36

நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு அழைப்பது குறித்து விஜயலட்சுமி பேசியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி

தமிழ் சினிமாவில் சென்னை 28, அஞ்சாதே, போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. அதன்பின், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வலம் வந்த வண்ணம் இருந்தார். தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தோன்றினார்.
இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘நல்ல படம் என்றால் பத்து பேர் போட்டி போடுவார்கள். அதிகரித்த போட்டி காரணமாக, சிலர் இன்னும் கொஞ்சம் பணத்தை குறைத்து கூட வாங்கி கொள்ள தயாராக இருக்கிறார்கள்.

அட்ஜெஸ்ட்மெண்ட்

நடிகர்கள் எதைச் சொன்னாலும் அதைச் செய்ய வேண்டும். எல்லா இடங்களிலும் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் பல இடங்களில் இதுதான் நடக்கிறது. ஒரு பெண் நடிக்க வந்துவிட்டால், பெண்களிடம் படுக்கைக்கு வருவார்களா என்று தான் எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள்.அவர்கள் சொல்லும் அனைத்தையும் கேட்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஒருமுறை இதே அனுபவம் ஏற்பட்டது. அட்ஜெஸ்மெண்ட் கோரிக்கையுடன் சிலர் என்னை அணுகினர். ஆனால் அவர்களின் கோரிக்கையை நான் ஏற்கவில்லை. நடிப்பு என்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று.

ஆரம்பத்தில் மாடலிங்குக்கு நல்ல வாய்ப்பு வேண்டுமென்றால் அப்பாவிடம் சொன்னாலே போதும். ஆனால் நான் அந்த விருப்பத்தை தேர்வு செய்யவில்லை. ஒரு விளம்பரத்தைக் கண்டுபிடித்தேன். அப்படி தான் நடிப்பு உலகத்திற்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

23-64e498b21fbb6

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply