இலங்கை வந்த விமானத்தில் பெண் ஒருவரின் மோசமான செயல்

இலங்கை வந்த விமானத்தில் பெண் ஒருவரின் மோசமான செயல்

  • local
  • August 30, 2023
  • No Comment
  • 68

கட்டாரில் இருந்து வந்த விமானப் பயணி ஒருவரின் பயணப் பொதிகளை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 5 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட வீட்டு பணிப்பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டுப் பணிப்பெண்
அவர் கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்ற நிலையில் அந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.பாதிக்கப்பட்ட குறித்த பயணியும் இந்த பெண்ணும் ஒரே விமானத்தில் இலங்கை வந்துள்ளனர்.

விமானத்திலேயே குறித்த பயணியின் பயணப் பொதிகளை அந்த திருடிச் சென்றுள்ளார்.

பாதுகாப்பு கமரா
பாதுகாப்பு கமராக்கள் சோதனை செய்யப்பட்டதையடுத்து சந்தேகநபர் சூட்கேஸ்சுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேகநபர் 5 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகளை திருடி அடகு வைத்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply