தேசிய பூங்காவில் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு..

தேசிய பூங்காவில் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு..

  • world
  • August 29, 2023
  • No Comment
  • 18

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தேசிய பூங்காவில் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை என அந்நாட்டு அமைச்சர் முகமது காலெத் என்பவர் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு நடந்து வரும் நிலையில் அங்கு பெண்களுக்கு ஒவ்வொரு உரிமையாக பறிபோய் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் கல்லூரிகளில் சென்று படிக்க கூடாது என்றும் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்றும் பெண்கள் விளையாட்டு துறையில் ஈடுபடக்கூடாது என்றும் புதுப்புது சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தேசிய பூங்காவிற்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை என அமைச்சர் முகமது காலெத் என்பவர் கூறியுள்ளார். பெண்கள் சுற்றுலா தளங்களை காண்பது தேவையற்ற ஒன்று என்றும் இது போன்ற இடங்களுக்கு பெண்கள் வரும்போது அவர்கள் முறையாக ஹிஜாப் அணிந்து வருவதில்லை என்றும் எனவே பெண்களை பூங்காவின் நுழைவாயிலில் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply