தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் மீது தாக்குதல்

தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் மீது தாக்குதல்

  • local
  • August 24, 2023
  • No Comment
  • 61

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கருவேப்பங்கேணி வட்டாரக்கிளையின் தலைவர் தனுச பிரதீப் என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (23.08.2023) இரவு சுமார் 9.20 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனது வீட்டிலிருந்து உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதற்குக் கடைக்குச் சென்று கொண்டிருந்தவேளை, கூழாவடி சந்தியில் உள்ள டிஸ்கோ விளையாட்டு மைதானம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் தலையில் பலமாகத் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருவேப்பங்கேணி வட்டார வேட்பாளர்
இவருக்குத் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இன்று (24.08.2023) காலை சத்திர சிகிச்சை கூடத்திற்கு மாற்றப்பட்டு அறுவைச்சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இவர், நடைபெற இருந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக கருவேப்பங்கேணி வட்டாரத்தில் போட்டியிட இருந்த தமிழ் அரசு கட்சியின் வேட்பாளராவார்.

இந்த சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் வைத்தியசாலையில் உள்ள பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply