Ashes: “ஸ்டோக்ஸ் மீண்டும் மெசேஜ் செய்தால் டெலிட் செய்து விடுவேன்”- மொயீன் அலி

Ashes: “ஸ்டோக்ஸ் மீண்டும் மெசேஜ் செய்தால் டெலிட் செய்து விடுவேன்”- மொயீன் அலி

  • Sports
  • August 3, 2023
  • No Comment
  • 64

நடந்து முடிந்த ஆஷஸ் தொடர்தான் தனது கடைசி டெஸ்ட் போட்டி என்று இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான மொயீன் அலி அறிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து மோதிய ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்திருக்கிறது.

ஆனால் நேற்று நடைபெற்ற ஆஷஸ் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணிதான் வெற்றி பெற்றது. இந்நிலையில், நடந்து முடிந்த ஆஷஸ் தொடர்தான் தனது கடைசி டெஸ்ட் போட்டி என்று  இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான மொயீன் அலி அறிவித்திருக்கிறார். 

 

மொயீன் அலி

கடந்த 2021 ஆம் ஆண்டு அனைத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால்  இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் வேண்டுகோள் விடுத்ததால் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய ஆஷஸ் தொடருக்காக மொயீன் அலி மீண்டும் அணிக்குத்  திரும்பி இங்கிலாந்திற்காக விளையாடினார்.  

இதுகுறித்து  பேசிய மொய்தீன் அலி, “ நல்ல ஒரு காம்பேக் ஆக இந்த ஆஷஸ்  தொடர் அமைந்தது. அதுமட்டுமின்றி எனக்கு மறக்கமுடியாத தொடராகவும் இருந்தது. ஓய்வை அறிவித்த பிறகு மீண்டும் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவேன். விக்கெட்டை வீழ்த்துவேன் என்று நான் நினைக்கவில்லை.

பென் ஸ்டோக்ஸ் அணிக்காக விளையாட சொல்லி மெசேஜ் செய்த காரணத்தால்தான் ஓய்வு அறிவித்த பிறகும்கூட அணிக்காக வந்து விளையாடினேன்.  இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி. மீண்டும் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்தால் அதனை டெலிட் செய்து விடுவேன்” என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார். 

Related post

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…

Leave a Reply