WI vs IND: சரியான நேரத்தில் தவறான பாதையில் பயணிக்கும் இந்திய அணி? வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஓர் அலசல்!

WI vs IND: சரியான நேரத்தில் தவறான பாதையில் பயணிக்கும் இந்திய அணி? வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஓர் அலசல்!

  • Sports
  • August 3, 2023
  • No Comment
  • 27

தனக்கான ரோல் என்ன என்பதில் வீரர்களுக்கும் தெளிவில்லை, அவர்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது இவர்களுக்கும் புரியவில்லை. அதுவும் ரோஹித், கோலி ஆகியவர்களை அமரவைத்து அழகு பார்ப்பதெல்லாம் தவறுகளின் உச்சம்.

மாற்று வீரர்கள் குறித்தெல்லாம் பின்னர் யோசிக்கலாம், இங்கே முதல்நிலை வீரர்களது பட்டியலே `கடைசிநேர மாறுதலுக்கு உட்பட்டது’ என்பதுதான் பெருங்கொடுமை. `உலகக்கோப்பையை எட்டுவதற்கான வரைபடமுமில்லை, வழி அறிய திசைகாட்டியும் கையிலில்லை, Treasure Hunt-க்கான குறிப்புகளும் விளங்கவில்லை’ – இந்திய அணி தற்போது தள்ளாடுவதும் இந்தச் சூழலில்தான்.

உலகக்கோப்பை போன்ற நெடுந்தொடர் பல சவால்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு போட்டிக்கும், ஒவ்வொரு எதிரணிக்கும், ஒவ்வொரு களத்திற்கும் என பிரத்யேக மைக்ரோ ப்ளான்களும், அதற்கு இணையான பல மாற்றுத்திட்டங்களும் தேவை. இதனை செய்து முடிப்பது அசாத்தியானது. அணிக்குள் உள்ள ஒருங்கிணைப்பும், வீரர்களது மனோதிடமும், தெளிவான அணுகுமுறையும் அதிமுக்கியம்.

ஒரு கோர் அணியை உருவாக்கி குறைந்தபட்சம் 1 வருடம் அந்த ஃபார்மேட்டில் போதுமான அளவு போட்டிகளில் அவர்களை ஒன்றாக ஆடவைப்பது அவசியம். பல கடினமான தருணங்களை எதிர்கொள்வதும் அதிலிருந்து மீண்டு வருவதும் அவர்களுக்கு பாடம் கற்பித்து புடம் போடும், விழிப்போடு வைக்கும். காயத்தினாலோ வேறுசில காரணங்களினாலோ இப்படையில் யாரேனும் ஆட முடியாத நிலை உண்டானால் அவ்விடத்தை நிரப்ப உள்ள மாற்று வீரர்களது மேலாண்மையும் வெற்றிக்கான இன்னொரு காரணியே. 2020-ல் இந்தியாவின் ஆஸ்திரேலிய தொடரில் நடந்ததைப் போல் சிப்பாய்களே தளபதிகளாகும் நிலைகூட ஏற்படலாம். ஆக, படைபலமே பாதி பலம். ஆனால் இந்திய அணியிலோ பாதி படையையே தற்சமயம் உறுதிசெய்து சொல்ல முடிகிறது.சுப்மன் கில், ரோஹித் ஷர்மா, விராத் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சிராஜ் என ஒரு சிலரை மட்டுமே இறுதி செய்ய முடிகிறது. 

 

 “பல மைதானங்களிலும் உலகக்கோப்பை நடைபெறுவதால் அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும், மூன்று சுழல்பந்து வீச்சாளர்களும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே அணியின் காம்பினேஷனை வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம்!”

என்று பயிற்சியாளர் டிராவிட் கூறியிருந்தார்

அத்தகைய அணி தற்சமயம் ஆயத்தமாக உள்ளதா?

பும்ரா ஆட முழுத்தகுதி உடையவராக இருப்பாரா? “ஆம்!” எனில் அயர்லாந்து தொடருக்கு தலைமை தாங்க உள்ள அவருக்கு தனது ரிதத்தை மீட்டெடுக்க போதுமான போட்டிகள் கிடைக்குமா? “இல்லை” எனில் சிராஜுடன் துணை நிற்கக்கூடிய மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் யார், யார்? என்னதான் பூமராங் போல பந்தினை அற்புதமாக ஸ்விங் செய்கிறார் என்றாலும் கடந்த ஐ.பி.எல்லில் 25 ஓவர்களை மட்டுமே வீசியிருந்த ஹர்திக் பாண்டியாவினால் ஒரு முழுமுதல் பௌலராக அணிக்கான ப்ரேக் த்ரூக்களைத் தர முடியுமா? மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓரளவு சிறப்பாகச் செயல்பட்டிருப்பினும் அதே தாக்கத்தை தாக்கூராலும், முகேஷாலும் பெரிய மேடையில் ஏற்படுத்த முடியுமா? தனது லைன் அண்ட் லெந்தோடு வேகத்தை ஒத்திசைவு செய்ய வைக்கப் போராடிக் கொண்டிருக்கும் உம்ரான் மாலிக் தன்னையும் அணியையும் ஒருங்கே மீட்டெடுப்பாரா என வேகப்பந்துவீச்சாளர் படை குறித்து பல கேள்விகளை அடுக்க வேண்டியிருக்கிறது.

பும்ரா

சுழல்பந்து படையிலோ அதிக தகுதியால் குழப்ப மேகம் சூழுகிறது. இந்தியாவின் Spin Quarter காலகட்டத்திற்குப் பின் தற்சமயம்தான் அணிக்காக ஆடப் பல தலைசிறந்த ஸ்பின்னர்களும் ஒரே சமயத்தில் தயாராக உள்ளனர். ஜடேஜாவுடன் களமிறங்குவது அஷ்வின், அக்ஸர், குல்தீப், சஹால் ஆகியவர்களில் யார், இந்தியா ஆஃப் ஸ்பின்னர்களுடனே ஆத்ம திருப்தி அடையுமா அல்லது லெக் ஸ்பின்னரைக் கொண்டு மாற்றத்தை விரும்புமா என பல சந்தேகங்கள் உள்ளன. கடந்த சில ஒருநாள் போட்டிகளில் இதில் பல காம்பினேஷன்களை இந்திய அணி பரிசோதித்து விட்டது. இருப்பினும் அவர்களுக்கு இதில் யாரினை இறுதி ப்ளேயிங் லெவனுக்குள் நிலைநிறுத்துவது என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது.

கடந்த டி20 உலகக்கோப்பையிலும் அதற்கு முந்தைய கோப்பைகளிலும் வீரர்கள் குறித்தும், பேட்டிங் பொசிஷன்கள் குறித்தும், வேகப்பந்துவீச்சு வீச்சாளர்கள், ஸ்பின்னர்களுக்கு இடையிலான விகிதம் குறித்தும் நிலவிய சிரத்தன்மை அற்ற நிலையே தலைகீழாய் அணியைக் கவிழ வைத்தது. அரையிறுதியோடு வெளியேறிய கடந்த டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இதுகுறித்த விமர்சனங்களை ரவி சாஸ்திரி எழுப்பிய போதுகூட,

“அணியில் உள்ள நாங்கள் என்ன நடக்கிறதென்பதில் தெளிவாக உள்ளோம். வெளியில் இருப்பவர்களால் இதனைப் புரிந்து கொள்ள முடியாது!”

என கேலியாக பதில் அளித்திருந்தார் ரோஹித் சர்மா.

ஆனால் அவர் கூறியிருந்த அதே திட்டமிடலில் இருந்த ஓட்டைகள் வழியேதான் வெற்றி கசிந்து வெளியேறியது. அதற்கும் மேலாக இம்முறை அவர் கூற்றின்படி பார்த்தால் அணியில் உள்ளவர்கள் யார் என்பதுவே இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.

பௌலிங்கைவிட பேட்ஸ்மேன் மற்றும் அவர்களது இடங்கள் குறித்த தெளிவின்மை இன்னமும் படுமோசம். ஸ்ரேயாஸ் மற்றும் கே.எல்.ராகுல் காயத்திலிருந்து மீண்டு வருவார்களா, இஷான் கிஷானை மாற்று விக்கெட் கீப்பராகச் செதுக்குகிறார்கள் என்றால் மத்திய வரிசையில் மோசமான ரெக்கார்டை வைத்திருக்கும் அவர் எந்த இடத்தில் ஆடவைக்கப்பட இருக்கிறார், சூர்யகுமார் யாதவுக்குத் தரப்படும் வாய்ப்புகளுக்கு நியாயம் கற்பித்து இறுதி லெவனுக்கு முன்னேறுவாரா, சஞ்சு சாம்சன் அவசரம் காட்டாமல் பொறுப்புணர்ந்து ஆடித் தனக்கான இடத்தினைக் கைப்பற்றுவாரா, ரோஹித் பழையபடி அணிக்கு நம்பிக்கைக்கு உரியவராக விளங்குவாரா, பின்வரிசை வீரர்களால் போதுமான ரன்வரத்து இருக்குமா எனத் தலைசுற்ற வைக்கும் பல கேள்விகளும் எழுகின்றன. ஸ்ரேயாஸ் மற்றும் கே.எல்.ராகுல் திரும்ப வருவது அணியை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வரும் என்றாலும் திரும்பி வந்த மாத்திரத்தில் அவர்களால் தங்களது முழுத்திறனையும் அதுவும் அழுத்தம் நிறைந்த உலகக்கோப்பையில் வெளிப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே.இத்தகைய குழப்பங்களே பயிற்சியாளர் – கேப்டன் கூட்டணியை பல பரிசோதனைகளை Trial and Error பாணியில் செய்ய வைக்கின்றன. இதில் தவறெதுவும் இல்லையென்றாலும் அது செய்யப்படும் நேரம்தான் தவறானதாகிறது. மொத்தமே பத்து போட்டிகளும், இரு மாதங்களும் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இத்தகைய சோதனை ஓட்டங்கள் கவுண்ட் டவுன் அறிவித்த பிறகு ராக்கெட்டின் உள்ளே புகுந்து பரிசோதிப்பதை ஒத்திருக்கிறது.

Related post

8வது முறையாக  உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

8வது முறையாக உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

சிறந்த வீரருக்கான பலோன் டி’ஆர் விருதை அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் ‘லயோனல் மெஸ்ஸி’ 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். சிறந்த வீரர் கடந்த 1956 முதல்…
இலங்கையின் உலக கிண்ண  அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கையின் உலக கிண்ண அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்பு இலங்கையின்…
இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று(10.10.2023) இடம்பெற்ற போட்டியில் குசல் மெண்டிஸ் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.வரலாற்று சாதனைஇந்நிலையில்,…

Leave a Reply