சுற்றுலா செல்வதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன தெரியுமா..?

சுற்றுலா செல்வதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன தெரியுமா..?

  • Travel
  • September 12, 2023
  • No Comment
  • 19

இன்பபொழுதுப்போக்குடன் சுற்றுலாச் செல்வது ஒரு கலை. கிணற்று தவளையாக ஓரிடத்தில் வாழ்வது எப்போது இன்பம் தராது. பல புதிய இடங்களுக்குச் செல்வதும், பல்வேறு மக்களை காண்பதும் நம் உணர்வை மட்டுமில்லாது உடலுக்கும் புத்துணர்ச்சி தரும்.

புதிய புதிய அனுபவங்களை பெற்றிடுவது தான் மனித பிறப்பின் மகத்துவம். அறிவியல் வளர்ச்சி காரணமாக இன்றைய உலகம் மிகவும் சுருங்கி விட்டது. இது பல இடங்களில் பலம் தான் என்றாலும், அனுபவத்தின் மூலம் பாடம் படிக்கும் மனிதனின் கற்றலுக்கு ஒரு தடை கல்லாக அமைந்துவிட்டது.

காண்பதே மனிதப் பண்பு. கலவையில் தானே புதுமை இருக்கிறது. மாறும் இந்த உலகில் சுற்றுலாவின் மூலமே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டாகும்.

எங்கு சுற்றுலா சென்றாலும் திட்டமிடல் மிகவும் அவசியம். அது உள்நாடாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி. ஒரு இடத்திற்கு செல்லும் போது அந்த இடத்தின் சிறப்புகள், பண்பாட்டு முறைகளை நன்கு அறிந்துக் கொள்ள வேண்டும்.

இது உங்களை அந்த இடங்களுக்கு செல்லும் போது தனித்துக் காட்டாது. புதிய இடத்திற்கு போகும் போது அங்குள்ள பண்பாட்டுச் சின்னங்களை பார்வையிடுங்கள். அப்போது தான் அந்த நாட்டின் பண்பாட்டு முறைகளை நாம் அறிந்திட முடியும்.

பல்வேறு நாடுகளில் சுற்றுலாத்துறைக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது. அந்த நாடுகளில் சுற்றுலா செல்வது ஒரு கலையாகவே மதிக்கப்படுகிறது. பல ஊர் சுற்றி வந்தவர் பண்டிதர் போன்ற சொற்றொடர்கள் நம் மொழிகளில் காணக்கிடைக்கின்றன.

கல்வி அறிவு படித்தால் கிடைத்து விடும். ஆனால் வாழ்வில் அனுபவத்தை பெற்றிட சுற்றுலா செல்வது மிக அவசியம். சுற்றுலா சென்றால் நமது உள்ளம் விசாலமாகிறது. மனம் மகிழ்ச்சி அடைகிறது. அப்போது நமக்குள் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற உன்னத நிலை ஏற்படுகிறது.

சுற்றுலாத்துறை நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்துகின்றன. இதை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பயணிகளை வரவேற்று பல்வேறு நாடுகள் அழைப்பு விடுக்கின்றன. அதற்கான கோடிகளை கொட்டி விளம்பரம் செய்கின்றன.

அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்ள சுற்றுலாத்துறை பயன்படுத்தப்படுகின்றன. நவீன போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்ட நித சூழலில், சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

உலக மக்கள் அனைவரிடமும் நிலவும் பேதம், வேற்றுமையை நீக்கிட சுற்றுலாத்துறை கைக்கொடுக்கிறது. அதனால், அதன் பலன்களை அறிந்து, அவற்றை தக்க வகையில் பயன்படுத்துவது நமது கடமை.

Related post

உலகின் சிறந்த நகரங்களின் வரிசையில் ரொறன்ரோ!

உலகின் சிறந்த நகரங்களின் வரிசையில் ரொறன்ரோ!

உலகின் முதனிலை நகரங்களின் வரிசையில் கனடாவின் ரொறன்ரோ நகரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த 25 நகரங்களுக்குள் ரொறன்ரோ நகரம் இடம்பிடித்துள்ளது. ரிசோசென்ஸ் கன்ஸல்டன்ஸி நிறுவனத்தினால் உலகின் தலைசிறந்த நகரங்களின் பட்டியல்…
இந்த இடங்களை  கூகுள் மேப்பில் கூட  கண்டுபிடிக்க முடியாது!

இந்த இடங்களை கூகுள் மேப்பில் கூட கண்டுபிடிக்க முடியாது!

தற்போதைய காலத்தில் உலகில் எந்த மூலைக்கு செல்ல திட்டமிட்டாலும் எவர் துணையும் இன்றி கூகுள் மேப்பை பார்த்து அந்த இடங்களுக்கு துல்லியமாக செல்ல முடியும். ஆனால் கூகுள் மேப்பில்…
சிவனொளிபாத மலைக்குச் செல்ல அதிரடியாக தடை…

சிவனொளிபாத மலைக்குச் செல்ல அதிரடியாக தடை…

அனுமதியின்றி பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *