அவுஸ்திரேலிய பெண்ணின் மூளையில் உயிருடன் இருந்த புழு! அதிர்ச்சியில் வைத்தியர்கள்

அவுஸ்திரேலிய பெண்ணின் மூளையில் உயிருடன் இருந்த புழு! அதிர்ச்சியில் வைத்தியர்கள்

  • world
  • August 29, 2023
  • No Comment
  • 76

அவுஸ்திரேலிய பெண் ஒருவரின் மூளையில் இருந்து 3 அங்குல நீளமுள்ள புழு ஒன்றை மருத்துவ நிபுணர்கள் குழு அகற்றியுள்ளது.

மனித மூளைக்குள் உயிருள்ள புழு இருப்பது இதுவே முதன்முறை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சத்திரசிகிச்சை அறையில் இருந்த ஒவ்வொருவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது என்று சத்திரசிகிச்சை நிபுணர் சஞ்சய சேனாநாயக்க கூறியுள்ளார்.

அத்துடன் விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பரவும் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்தை இது எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

குறித்த பெண், தான் வாழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரையில், கீரைகளை சேகரித்தபோது இந்த புழு தொற்றியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இந்த நிலையில் வயிற்று வலி, இருமல், இரவு வியர்த்தல் மற்றும் வயிற்றுப்போக்கு என்பது அவருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இது மறதியை அதிகரித்து, மன அழுத்தத்தையும் மோசமாக்கியுள்ளது.

இந்தநிலையில், நோயாளி 2021ஆம் ஆண்டு ஜனவரி பிற்பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை

பின்னர் ஸ்கேன் செய்ததில், மூளையின் வலது முன் மடலில் ஒரு வித்தியாசமான காயம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே 2022 ஜூன் மாதத்திலேயே குறித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை, அவரின் நோய்க்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.இதேவேளை, மருத்துவ வரலாற்றை உருவாக்கினாலும் குறித்த நன்றாக குணமடைந்து வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

 

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply