இலங்கைக்கு வந்த ரஷ்ய தம்பதியினருக்கு நேர்ந்த நிலை!

இலங்கைக்கு வந்த ரஷ்ய தம்பதியினருக்கு நேர்ந்த நிலை!

  • local
  • August 11, 2023
  • No Comment
  • 100

களுத்துறை பகுதியில் உள்ள வீதியொன்றில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ​மேலும் மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியமை சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.இந்த விபத்து சம்பவம் கட்டுகுருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்த ரஷ்ய தம்பதியருடன் பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் தம்பதியும் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வஸ்கடுவவில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் இருந்து ஹிக்கடுவை பகுதிக்கு சென்றுகொண்டிருந்த போது இவ்விபத்து சம்பவித்துள்ளது.

ரஷ்ய தம்பதியினர் பயணித்த முச்சக்கரவண்டியின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்ட நிலையில் குறித்த சாரதியை கைது செய்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply