பாடசாலை மாணவி மீது கத்திக்குத்து தாக்குதல்

பாடசாலை மாணவி மீது கத்திக்குத்து தாக்குதல்

  • local
  • August 9, 2023
  • No Comment
  • 21

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் மினிபே-ஹசலக்க,மொறயா பகுதியில் இன்று(08.08.2023) காலை இடம்பெற்றுள்ளது.இதன்போது மாணவி மீது தாக்குதல் நடத்திய இளைஞரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம்
தாக்குதலில் படுகாயமடைந்த 11ஆம் தரத்தைச் சேர்ந்த மாணவி தற்போது மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞர், தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய திருமணமாகாதவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான மாணவி முகநூல் ஊடாக அந்த இளைஞருடன் அறிமுகமாகி சுமார் ஒரு வருட காலமாக காதல் தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை
இதன் பின்னர் குறித்த மாணவி காதல் உறவை நிறுத்தியதால் தான் அவரை தாக்கியதாக இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.இதேவேளை மாணவியின் உடலில் 3 சிறிய வெட்டுக் காயங்கள் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply