நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலம்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்

நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலம்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்

  • world
  • August 7, 2023
  • No Comment
  • 74

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம், இன்று நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (Indian Space Research Organization) இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் சுமாா் 615 கோடியில் செலவில் உருவான சந்திரயான் 3 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த மாதம் 14 ஆம் தேதி எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான் 3

புவி வட்டப்பாதையின் இறுதிச்சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த விண்கலம், கடந்த முதலாம் திக‌தி நிலவின் சுற்றுப்பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கி இருந்தது.

இந்த நிலையில் நிலவை நோக்கிய பயணத்தின் அடுத்தகட்டமாக இன்று (05.08.2023) சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.இன்று மாலை 7 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதைக்குள் செல்லும் முக்கிய கட்டத்தை சந்திரயான் 3 நெருங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவை நோக்கிய பயணத்தில் மூன்றில் இரண்டு பங்கை சந்திரயான் 3 விண்கலம் நிறைவு செய்துள்ளது. அத்துடன், ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-3 லேண்டரை சாஃப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply