ஆசிரியரின் மோசமான செயல்! தவறான முடிவெடுத்த மாணவி

ஆசிரியரின் மோசமான செயல்! தவறான முடிவெடுத்த மாணவி

  • local
  • August 7, 2023
  • No Comment
  • 84

பாடசாலை மாணவியொருவர் சில மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்டுபத பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வகுப்பு ஆசிரியரால் பாலியல் வன்புணர்விற்கு ஆளானதன் காரணமாகவே குறித்த மாணவி இவ்வாறான தவறான முடிவை எடுத்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (05.08.2023) இடம்பெற்றதாக கட்டுபத பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரிடம் வழங்கிய வாக்கு மூலம்
கொஸ்தெனிய, சியம்பலாவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த மாதம் 23ம் திகதி வகுப்பு ஆசிரியர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்து மாத்திரை உட்கொண்டதாவும் மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், கட்டுபத பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை குறித்த மாணவி மேலதிக சிகிச்சைக்காக குளியாபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply