Elementor #8111

MI New York: `டைகர் கா ஹூக்கும்..' 55 பந்துகளில் 137 ரன்கள்; சீறிய பூரன்; அமெரிக்காவிலும் வென்ற MI

MI நியூயார்க் அணி இந்தத் தொடரை வென்றிருந்தாலும் தொடக்கத்தில் அத்தனை சிறப்பாக ஆடியிருக்கவில்லை. லீக் சுற்றில் ஆடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே MI அணி வென்றிருந்தது. இதனால் புள்ளிப்பட்டியலிலுமே நான்காவது இடத்தைப் பிடித்துதான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. எலிமினேட்டர் சுற்றில் வாஷிங்டன் அணிக்கு எதிராக MI அணியில் டெவால்ட் ப்ரெவிஸ் நிலைத்து நன்றாக ஆடி அரைசதம் அடிக்க ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளை எடுக்க MI அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்ததாக சேலஞ்சர் சுற்றில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் MI அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் MI அணியின் கேப்டனான பொல்லார்ட் லீக் சுற்றின் போதே காயம் காரணமாக பென்ச்சுக்கு சென்றுவிட்டார். நாக் அவுட்டில் பொல்லார்ட் இல்லாமல்தான் MI அணி களமிறங்கியது.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் நிக்கோலஸ் பூரன் தலைமையில் MI அணி சியாட்டல் அணியை எதிர்கொண்டது. MI அணி முதலில் பந்துவீசி சியாட்டலை 183 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தது. ரஷீத்கான் 3 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். MI க்கு டார்கெட் 184. இந்த டார்கெட்டை MI அணி 16 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்துவிட்டது. அதற்கு ஒரே காரணம் கேப்டன் நிக்கோலஸ் பூரன் மட்டும்தான்.55 பந்துகளில் 137 ரன்களை அடித்து ஒற்றை ஆளாக MI அணியை வெல்ல வைத்தார். ப்ரெட்டோரியஸின் ஓவரில் 28 ரன்கள். ஆண்ட்ரூ டையின் ஓவரில் 3 சிக்சர்கள். ஹர்மீத் சிங்கின் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் என பூரன் செய்தது அத்தனையும் அதகள ரகம்தான்.பூரனின் அதிரடியால் சிரமமேயின்றி MLC யின் முதல் சீசனை மும்பை அணி அசத்தலாக வென்று சாம்பியனாகியிருக்கிறது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…

Leave a Reply