மஸ்கெலியா  பகுதியில் நேற்று இரவு விபத்துக்குள்ளான  லொரி

மஸ்கெலியா பகுதியில் நேற்று இரவு விபத்துக்குள்ளான லொரி

  • local
  • October 5, 2023
  • No Comment
  • 51

மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் பகுதியில் லொறி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் 3ம் திகதி இரவு 9.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள பிரவுன்ஸ்விக் தோட்ட புளும்பீல்ட் பகுதியில் இருந்து காசல்ரீ பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்று இருப்பதாக மஸ்கெலியா போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் சாரதி உட்பட 22 பேர் பாதிக்கப்பட்டதோடு சாரதி மற்றும் பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூவர் அதிக அளவில் காயங்கள் ஏற்பட்டு நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கபட்டு உள்ளனர்.

விபத்தில் உயிர் சேதம் இல்லை எனவும் விபத்துக்கான காரணங்கள் இது வரையில் கண்டறியப் படவில்லை எனவும் மேலதிக விசாரனைகளை மஸ்கெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களில் சிறு காயங்களுடன் ஒரு ஆண் நான்கு பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மஸ்கெலியா வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி எச்.ஜ.இர்ஜாட் கூறினார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply