2018: இந்தியா சார்பாக ஆஸ்கருக்குச் செல்லும் மலையாளப் படம்

2018: இந்தியா சார்பாக ஆஸ்கருக்குச் செல்லும் மலையாளப் படம்

  • Cinema
  • October 3, 2023
  • No Comment
  • 52

2024-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு மலையாளத் திரைப்படமான `2018′ படம் இந்தியா சார்பில் அதிகாரபூர்வ என்ட்ரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்று ஆஸ்கர். ஆண்டுதோறும் சிறந்த நடிகர், நடிகைகள், சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர், தொழில்நுட்பக்கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதானது வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு மலையாள படமான ‘2018’ படம், இந்தியா சார்பில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூட் ஆண்டனி இயக்கத்தில், டொவினோ தாமஸ் உட்படப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் ‘2018’. 2018-ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் குறித்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது இப்படம் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வானதற்குப் பலரும் படக்குழுவினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

2024-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட் கட்டடத்தில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற இருக்கிறது.

சமீபத்தில் நடந்த SEPTIMUS விருது விழாவில் சிறந்த ஆசிய நடிகர் என்ற விருதை இதே ‘2018’ படத்துக்காக டொவினோ தாமஸ் வென்றார். “ஒவ்வொரு முறை விழும்போதும் எழுந்து நிற்பதில்தான் கேரளாவின் சிறப்பு உள்ளது. 2018-ல் நம்மைத் தாக்கிய பெருவெள்ளத்தால் கேரளா வீழத்தொடங்கியது. பிறகு நாம் எத்தகைய மன உறுதி உள்ளவர்கள் என்பதை ஒட்டுமொத்த உலகத்திற்கும் காட்டினோம்” என்று விருது குறித்து தனது நெகிழ்ச்சியினைத் தெரிவித்திருந்தார் டொவினோ.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply