2018: இந்தியா சார்பாக ஆஸ்கருக்குச் செல்லும் மலையாளப் படம்

2018: இந்தியா சார்பாக ஆஸ்கருக்குச் செல்லும் மலையாளப் படம்

  • Cinema
  • October 3, 2023
  • No Comment
  • 16

2024-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு மலையாளத் திரைப்படமான `2018′ படம் இந்தியா சார்பில் அதிகாரபூர்வ என்ட்ரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்று ஆஸ்கர். ஆண்டுதோறும் சிறந்த நடிகர், நடிகைகள், சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர், தொழில்நுட்பக்கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதானது வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு மலையாள படமான ‘2018’ படம், இந்தியா சார்பில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூட் ஆண்டனி இயக்கத்தில், டொவினோ தாமஸ் உட்படப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் ‘2018’. 2018-ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் குறித்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது இப்படம் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வானதற்குப் பலரும் படக்குழுவினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

2024-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட் கட்டடத்தில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற இருக்கிறது.

சமீபத்தில் நடந்த SEPTIMUS விருது விழாவில் சிறந்த ஆசிய நடிகர் என்ற விருதை இதே ‘2018’ படத்துக்காக டொவினோ தாமஸ் வென்றார். “ஒவ்வொரு முறை விழும்போதும் எழுந்து நிற்பதில்தான் கேரளாவின் சிறப்பு உள்ளது. 2018-ல் நம்மைத் தாக்கிய பெருவெள்ளத்தால் கேரளா வீழத்தொடங்கியது. பிறகு நாம் எத்தகைய மன உறுதி உள்ளவர்கள் என்பதை ஒட்டுமொத்த உலகத்திற்கும் காட்டினோம்” என்று விருது குறித்து தனது நெகிழ்ச்சியினைத் தெரிவித்திருந்தார் டொவினோ.

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply