லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் பற்றிய விசேட அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் பற்றிய விசேட அறிவிப்பு

  • local
  • October 3, 2023
  • No Comment
  • 77

மாதாந்த சமையல் எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம், இம்முறை விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாதாந்த விலை சூத்திரத்தின்படி எதிர்வரும் 4ம் திகதி புதிய விலை அறிவிக்கப்படும்.

கடந்த மாதம் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
அதன்படி, அதன் புதிய விலை 3,127 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,256 ரூபாவாகும்.

2.3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 587 ரூபாவாகும்.

எவ்வாறாயினும், கடந்த மாதம் எரிவாயு விலை சூத்திரத்தின்படி 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,045 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாத வகையில் 145 ரூபாவால் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, 12.5 கிலோ கிராம் எடையுள்ள லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 3,835 ரூபாவாகும்.

5 கிலோ எடை கொண்ட லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.59 உயர்ந்து புதிய விலை ரூ.1,535.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply