சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாப்பது குறித்த கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..
- lifestyle
- September 12, 2023
- No Comment
- 15
பொதுவாக சூரிய ஒளியில் இருந்து நம் சருமத்தை பாதுகாப்பதில் சன்ஸ்க்ரீன் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. பொதுவாக கறுப்பான மக்களுக்கு சன்ஸ்க்ரீன் அவசியமில்லை என்ற தவறான கருத்துக்களும் மக்களிடையே நிலவி வருகிறது. அதே மாதிரி வெள்ளையாக இருப்பவர்களே அதிகமாக சரும புற்றுநோயால் பாதிப்படைகின்றனர் என்ற நம்பிக்கையும் மக்களிடையே இருக்கிறது.
இப்படி சூரிய ஒளியில் இருந்து நம் சருமத்தை பாதுகாப்பதில் ஏராளமான பொய் கட்டுக்கதைகள் நிலவி வருகின்றன. எனவே இனி இந்த இந்த பொய்யான கட்டுக்கதைகளுக்கு பின்னே உள்ள உண்மைகளை அறிந்து செயல்பட வேண்டும். அதைப்பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம்.
சூரிய ஒளி பாதுகாப்பு பற்றிய கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..
கட்டுக்கதை1 : சூரிய ஒளி கருமையான சருமத்தை ஒன்றும் செய்யாது
உண்மை : சூரிய ஒளி பாதுகாப்பு உங்கள் தோல் எந்த நிறமாக இருந்தாலும் பாதிப்பை உண்டாக்கும். கருப்பாக இருப்பவர்கள் சருமத்தில் மெலனோசைட்டுகள் அல்லது மெலனின் உருவாக்கும் செல்கள் பெரிய பெரிய கொத்துகளாக உருவாகின்றன. இவை சூரிய கதிர்களை உறிஞ்சி செல்களின் டிஎன்ஏவை சேதப்படுத்துகிறது.
அதே மாதிரி வெளிர் நிற முடையவர்களின் மெலனோசைட்டுகள் சிறிய சிறிய கொத்துக்களை உருவாக்குகிறது. இதனால் சூரிய ஒளி எளிதாக தாக்கி செல்களின் டிஎன்ஏ சேதமாகிறது. எனவே கருப்பாக இருந்தாலும் சரி நீங்கள் வெள்ளையாக இருந்தாலும் சரி அதனால் டிஎன்ஏ பாதிப்பு ஏற்படுவது சாத்தியமே என்கிறார்கள் சரும நிபுணர்கள்.
கட்டுக்கதை 2: கறுப்பாக இருப்பவர்களுக்கு சரும புற்றுநோய் பாதிப்பு குறைவு
உண்மை : வெள்ளையாக இருப்பவர்கள் சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் கூட தோலின் மாற்றத்தை கண்டு அவர்கள் எளிதாக அதை அறிந்து விடுகின்றனர். ஆனால் கருப்பாக இருப்பவர்கள் தோலில் ஏற்படும் மாற்றத்தை எளிதாக அறிவதில்லை. இதனாலயே தோல் புற்றுநோய் முற்றிய நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
தோல் புற்றுநோயை கண்டறிவதற்கான விகிதம் கருப்பானவர்களிடம் குறைவாக உள்ளது. இதனால் காலப்போக்கில் அவர்கள் இறக்க நேரிடுகிறது. தோல் புற்றுநோயை கண்டறிவதற்கான விகிதமானது 1-2% கறுப்பர்களுக்கும், 2-4% ஆசிய கண்டத்தில் இருப்பவர்களுக்கும், 4-5 % ஹிஸ்பானியர்களுக்கும் ஏற்படுகின்றன. எனவே கறுப்பானவர்கள் தோல் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே அதைப்பற்றி அறிகின்றனர்.
கட்டுக்கதை 3: தோல் புற்றுநோய் கட்டிகள் அனைத்து சருமத்திற்கும் ஒரே மாதிரியாக இருக்கும்
உண்மை : உண்மையில் தோல் புற்றுநோய் அறிகுறிகள் புற்றுநோயின் வகை மற்றும் தோலின் நிறத்தை பொருத்து மாறுபடுகிறது. ஸ்குவாமஸ் செல் கார்சினோமா, பாசல் செல் கார்சினோமா மற்றும் மெலனோமா போன்ற மூன்று வகை புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. ஸ்குவாமஸ் செல் கார்சினோமா என்பது கருமையான சருமத்தில் மிகவும் பொதுவான புற்றுநோயாகும். பாசல் செல் கார்சினோமா அனைத்து தோல் நிறங்களிலும் அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்கும்.
மெலனோமா எளிதில் எல்லா இடங்களுக்கும் பரவக் கூடியது. இது கருப்பான வடிவில் தோன்றுகிறது. வெள்ளையாக இருப்பவர்கள் மெலனோமா கட்டிகளை முதுகில் அல்லது கீழ் கால்களில் பெறுகிறார்கள். உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், உதடுகள் மற்றும் விரல் நகங்கள் போன்ற வெவ்வேறு இடங்களில் மெலனோமா ஏற்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு மெலனோமா இருந்தால் உங்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தோல் புற்றுநோய் வகைகளை பொருத்து அதன் தோற்றம் மாறுகிறது.
கட்டுக்கதை 4: கறுப்பாக இருப்பவர்களுக்கு தோல் புற்றுநோய் ஸ்கிரீனிங் தேவையில்லை உண்மை : சரும நிறத்தை பொருட்படுத்தாமல் அனைவரும் சரும மருத்துவரை தவறாமல் பார்க்க வேண்டும். ஏனெனில் உங்களுடைய குடும்ப வரலாறு, தோல் வகையை பொருத்து புற்றுநோய் சிகிச்சை மாறுபடுகிறது. ஒவ்வொரு 2-3 வருடங்களுக்கும் ஒருமுறை சரும மருத்துவரை சந்தித்து புற்றுநோய் ஸ்கிரீனிங் செய்ய வேண்டும். கறுப்பாக இருப்பவர்களுக்கு சரும புற்றுநோய் உடனே தெரிவதில்லை. இதனால் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே மருத்துவரை சந்திக்கின்றனர். எனவே புற்றுநோய் ஸ்கிரீனிங் என்பது அவசியமான ஒன்று.
கறுப்பாக இருப்பவர்கள் தங்கள் சருமத்தை சூரிய ஒளிப் பாதிப்பில் இருந்து எப்படி பாதுகாக்க வேண்டும்?
* எப்பொழுதும் உங்கள் தோலின் நிறத்தை பொருட்படுத்தாமல் சரும பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். புற ஊதாக் கதிர்கள், மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் வயதான புள்ளிகள் இவற்றை நீங்கள் கவனிக்க வேண்டும்.
* குறைந்த பட்சம் SPF 30 அல்லது அதற்கு அதிகமான சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள். நீங்கள் வெயிலில் வெளியே செல்லும் போது 2 மணி நேரத்துக்கு ஒரு முறை சன்ஸ்க்ரீனை அப்ளை செய்ய வேண்டும். சரும நிறங்களுக்கு ஏற்ற வண்ணமயமான லோசன்களும் தற்போது கிடைக்கிறது. நீங்கள் நீச்சல் குளங்களுக்கு செல்லும் போது நீர்ப்புகா அல்லது நீர் எதிர்ப்பு சன்ஸ்க்ரீனை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
* உச்ச நிலையில் சூரிய ஒளிக்கதிர்கள் இருக்கும் நேரத்தில் வெளியே செல்லாதீர்கள். 10-2 மணி நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம்.
* சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் ஆடைகளை அணிந்து செல்லுங்கள்.
* வெளியே செல்லும் போது தொப்பி மற்றும் சன்ஸ் கிளாஸை அணிந்து செல்லுங்கள்.
* தோலில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டால் கூட கவனியுங்கள். மாற்றங்கள் இருந்தால் உடனே சரும மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.
- Tags
- lifestyle