முதன்முறையாக இந்தியா செல்லும் பிரித்தானிய பிரதமர் ரிஷி: கூடவே உருவாகியுள்ள சர்ச்சை

முதன்முறையாக இந்தியா செல்லும் பிரித்தானிய பிரதமர் ரிஷி: கூடவே உருவாகியுள்ள சர்ச்சை

  • world
  • August 30, 2023
  • No Comment
  • 92

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம், G20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா செல்கிறார். இந்த தகவல் வெளியானதுமே கூடவே சில சர்ச்சைகளும் உருவாகியுள்ளன.

சர்ச்சைக்குக் காரணம்…
பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்று தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது, 12ஆவது சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

இந்தியா சார்பில் இந்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரான பியுஷ் கோயல், பிரித்தானியா சார்பில் பிரித்தானிய வர்த்தகச் செயலரான கெமி பேடனாக் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வருகிறார்கள்.இந்த சூழலில் ரிஷி இந்தியா செல்கிறார். அவரும் இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தெரிகிறது.

அந்த விடயம் தொடர்பில்தான் தற்போது பிரித்தானிய அரசியல்வாதிகள் பிரச்சினை எழுப்பியுள்ளார்கள்.

என்ன பிரச்சினை?
பிரச்சினைக்குக் காரணம், ரிஷி, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பதுதான். அதாவது, சமீபத்தில் தன் மனைவி அக்‌ஷதா மூர்த்தி தொடர்பில் சர்ச்சை ஒன்றில் சிக்கினார் ரிஷி. ரிஷி பட்ஜெட்டில் அறிவித்த சலுகை ஒன்றின் மூலம், அவரது மனைவியான அக்‌ஷதா பங்குதாரராக உள்ள Koru Kids என்னும் அமைப்பு வாயிலாக அவருக்கு லாபம் கிடைக்கலாம் என்ற கருத்து உருவாகியது. அந்த அமைப்பில் ரிஷியின் மனைவி பங்குதாரராக உள்ள விடயத்தை அவர் மறைத்ததாக பிரித்தானிய அரசியல்வாதிகள் பிரச்சினை எழுப்பினார்கள்.

ஆக, இப்போது பிரித்தானியாவும் இந்தியாவும் செய்துகொள்ளும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாகவும் ரிஷியின் மாமனார் குடும்பத்துக்கு லாபம் கிடைக்குமா என்பதை அவர் உறுதிசெய்யவேண்டும் என பிரித்தானிய அரசியல்வாதிகள் குரல் எழுப்பத் துவங்கியுள்ளனர்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply