ChatGPT: ஒரு நாளைக்கு 7 மில்லியன் டாலர் இழப்பு; பண நெருக்கடியில் திணறுகிறதா `OPEN AI’ நிறுவனம்?

ChatGPT: ஒரு நாளைக்கு 7 மில்லியன் டாலர் இழப்பு; பண நெருக்கடியில் திணறுகிறதா `OPEN AI’ நிறுவனம்?

ChatGPT-யை உருவாக்கிய `Open AI’ நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 7 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 5.83 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

மைக்ரோசாப்ட் மற்றும் பிற நம்பத்தகுந்த மூலதன நிறுவனங்களிடமிருந்து கணிசமான 10 பில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்ற போதிலும், ChatGPT தொடங்கப்பட்டதிலிருந்து இந்நிறுவனம் 540 மில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. மேலும் இது 1 பில்லியன் டாலர் அளவிற்கு நன்கொடைகளைத் திரட்டத் தவறியதால், 2020-ல் இந்நிறுவனம் capped-profit அடிப்படையிலான OPEN AI LAB  என்ற ஒரு துணை நிறுவனத்தை உருவாக்கியது. எனினும் இது போதுமான அளவு பயனளிக்கவில்லை.  

GPT-3.5 மற்றும் GPT-4 போன்ற மேம்பட்ட AI மாடல்களை வணிக மயமாக்குவதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், OpenAI நிறுவனத்தின் வருவாய் அதன் அடிப்படை செலவினங்களை கூட ஈடுசெய்ய போதுமானதாக இல்லை.
 
மேலும் ஆரம்பத்தில் பிரபலமடைந்தாலும், ஜூலை 2023-ல் ChatGPT பயனர்களின் எண்ணிக்கையில் 12% சரிவைச் சந்தித்தது, தரவுகளின் அடிப்படையில் பயனர் எண்ணிக்கை 1.7 பில்லியனில் இருந்து 1.5 பில்லியனாகக் குறைந்தது. குறைந்துவரும் இதன் பயனர்களின் எண்ணிக்கை நிலைமையை மிகவும் மோசமாக மாற்றியுள்ளது.
இதுமட்டுமின்றி, மேம்பட்ட AI மாடல்களை உருவாக்கத் தேவையான Graphics processing unit-களின் பற்றாக்குறையால் OpenAI-ன் நிலைமை மேலும் சிக்கலாகியிருக்கிறது. இந்த வளங்களின் பற்றாக்குறை, புதிய மாடல்களைத் திறம்பட மேம்படுத்துவதற்கும், அவற்றைச் செயல்படுத்தத் தேவையான நிறுவனத்தின் திறனையும் குறைக்கிறது. மேலும் அதன் முதன்மை அடையாளமான ChatGPT-ன் தரத்தைப் பாதிக்கிறது.

Related post

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

உலக அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலி டிக்டாக் (TikTok). இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance) சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. டிக்டாக் மூலம்…
இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க கூடுதல் அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் பயனர்களின் பாதுகாப்பிற்காக புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் அம்சங்கள்சமூக வலைதள ஊடகமான இன்ஸ்டாகிராமில் பயனர்களின் தரவுகள், வரைமுறையற்று பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள்…
20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

20 லட்சம் யூடியூப் வீடியோக்களை நீக்கிய கூகுள்… காரணம் இதுதான்?!

குறிப்பிட்ட நேரம் வரை யூடியூப் வீடீயோவை பார்த்தால் பணம் பெறலாம் என்ற மோசடிகளும், தீங்கிழைக்கக்கூடிய கன்டெட்கள் மற்றும் தவறான தகவல்கள் யூடியூபில் அதிகரித்து வருகின்றன. சமீப காலங்களில் ஆன்லைன்…

Leave a Reply