அத்துமீறி நுழைந்த 11 சீன போர் விமானங்கள்! விரட்டியடித்த தைவான்

அத்துமீறி நுழைந்த 11 சீன போர் விமானங்கள்! விரட்டியடித்த தைவான்

  • world
  • August 30, 2023
  • No Comment
  • 69

தைவான் ஜலசந்தி பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 11 சீன போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளன.

தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுத்து வரும் நிலையில், தீவு நாடான தைவானுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இதனை தைவான் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் கண்டறிந்துள்ளது.அத்துமீறி நுழைந்துள்ள கடற்படை கப்பல்கள்
இந்நிலையில், தைவானை சுற்றிலும் கடந்த திங்கட்கிழமை காலை 6 மணியில் இருந்து, செவ்வாய் கிழமை காலை 6 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் சீனாவின் 11 போர் விமானங்கள் மற்றும் 10 கடற்படை கப்பல்கள் தைவானுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.

இவற்றில், தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் வடகிழக்கு பிரிவிற்குள் அத்துமீறி சென்றுள்ளது. இதன்பின்னர் அந்நாட்டை சுற்றி வந்து தென்மேற்கு மூலையில் இடைக்கோட்டை மீண்டும் கடந்து சென்றது.இதனை தொடர்ந்து, இரண்டு செங்டு ஜே-10 ரக போர் விமானங்களும் அந்த பகுதியை கடந்து சென்றுள்ளன.

இதனால், அவற்றை விரட்டியடிக்க விமானங்கள், கப்பல்கள் மற்றும் தரை பகுதியை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஏவுகணைகள் ஆகியவற்றை பயன்படுத்தி, சீன விமானங்களை தைவான் விரட்டியடித்துள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply