கல்லைக் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன்: பொதுமக்களின் உதவியை நாடும் சர்வதேச பொலிஸார்

கல்லைக் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன்: பொதுமக்களின் உதவியை நாடும் சர்வதேச பொலிஸார்

  • world
  • August 30, 2023
  • No Comment
  • 36

ஜேர்மனியில் டானூப் நதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் தொடர்பில் சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் சடலமானது பவேரியாவில் கடந்த ஆண்டு மே மாதம் கல் ஒன்றினால் கட்டப்பட்டு கண்டுபடிக்கப்பட்டது.

ஜேர்மன் பொலிஸாரால் சிறுவனை அடையாளம் காண முடியவில்லை என்பதுடன் மரணத்திற்கான காரணத்தையும் உறுதி செய்ய முடியவில்லை எனவும் கூறப்படுகின்றது.இன்டர்போலிடம் உதவி
Black Notice எனப்படும் அடையாளம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க சர்வதேச எச்சரிக்கையை விடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையிலேயே சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.

கடந்த மே 19 அன்று சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது, எத்தனை நாட்கள் தண்ணீரில் இருந்தது என்பது தெரியவில்லை என்று இன்டர்போல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், சிறுவன் ஜேர்மனிக்கு வெளியே சில காலம் தங்கியிருந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ள பொலிஸார், 195 உறுப்பு நாடுகளைக் கொண்ட இன்டர்போல் இந்த விவகாரத்தில் உதவ முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், சிறுவன் தொடர்பில் தகவல் தெரிநிதவர்கள் உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply