கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்து – திருமணமாகி ஒரு வருடத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்

கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்து – திருமணமாகி ஒரு வருடத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்

  • local
  • August 29, 2023
  • No Comment
  • 79

முறிகண்டிக்கும் – இரணைமடு சந்திக்கும் இடையில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி ஏ9 வீதியில் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பார ஊர்தியுடன் எதிராக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விசாரணை
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (29.08.2023) அதிகாலை உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செனவரட்ன எனவும் அவர் திருமணமாகி ஒரு வருடகாலம் என தெரிவிக்கப்படுகின்றது.

இறந்த பொலிஸ் உத்தியோகத்தர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் கீழ் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply