உயர்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

உயர்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

  • local
  • August 28, 2023
  • No Comment
  • 71

கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்கான மாணவர்களை இணைப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு  (27.08.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தொழிற்கல்வி கற்கைநெறி முன்னெடுக்கப்படும் 525 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.

20 பாடங்கள் இந்தத் தொழிற்கல்வி
இந்த தெரிவின்போது, கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பெறுபேறுகள் கருத்திற் கொள்ளப்பட மாட்டாது.

எனவே, தொழிற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 12ஆம் தரத்தில் பாடசாலை கல்வியை நிறைவு செய்து 13ஆம் தரத்தில் தொழிற்கல்வி தொடர்பான பாடங்களின் கீழ் என்.வி.கிவ் நான்காம் நிலை தொழிற்பயிற்சி கற்கைநெறி ஒன்றை நிறைவு செய்ய முடியும்.அத்துடன், சிறுவர் உளவியல் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆய்வுகள், வாகன இயந்திர தொழில்நுட்பவியல் மற்றும் ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட 20 பாடங்கள் இந்தத் தொழிற்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளன.

13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வியை வழங்கும் நோக்கில் இந்த தொழிற்கல்வி நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இது தொடர்பான விண்ணப்பங்களை உரிய பாடசாலைகளின் அதிபருக்கு அனுப்பிவைக்குமாறும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply