கனடா செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கனடா செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

  • local
  • August 25, 2023
  • No Comment
  • 73

இலங்கை கடவுச்சீட்டில் போலி கனேடிய வீசா மூலம் நாட்டை விட்டு வெளியேற முயன்ற நபரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் புதன்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியது.

42 வயதான அந்த நபர் புதன்கிழமை மாலை 5 மணி அளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL225 விமானத்தில் பயணம் செய்ய முயன்றுள்ளார்.

இதன் போது விமான ஊழியர்கள் அவரது கனேடிய விசா குறித்து சந்தேகம் அடைந்து அவரை தடுத்து நிறுத்தி சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

எல்லை கண்காணிப்பு
பின்னர் அவர் கட்டுநாயக்க விமான நிலைய எல்லை கண்காணிப்பு பிரிவில் குடிவரவுத் துறையின் சிறப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அதிகாரிகள் அவரது இலங்கை கடவுச்சீட்டில் ஒட்டப்பட்ட கனேடிய விசா போலியானது என்பதைக் கண்டறிந்தனர்.இந்த நிலையில் பயணியின் இலங்கை கடவுச்சீட்டு உண்மையானது எனவும் அவர் வத்தளையில் உள்ள ஒரு நபரிடம் இருந்து 4.5 மில்லியன் ரூபாய்க்கு போலி கனேடிய விசாவைப் பெற்றுள்ளார் எனவும் சிரேஷ்ட குடிவரவு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் முதலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டுபாய் சென்று பின்னர் வேறு விமானத்தில் கனடா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலி பயண ஆவணம்
ஒகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு போலி பயண ஆவணங்களை தயாரித்து சட்டவிரோதமான முறையில் கனடா, இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு செல்ல 10 க்கும் மேற்பட்ட நபர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பட்டியலை இந்த கைதும் சேர்க்கப்பட்டுள்ளது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply