விஜயகாந்தின் உடலில் பின்னடைவு… மகனால் வெளிவந்த உண்மை! கவலையில் தொண்டர்கள்

விஜயகாந்தின் உடலில் பின்னடைவு… மகனால் வெளிவந்த உண்மை! கவலையில் தொண்டர்கள்

  • Cinema
  • August 22, 2023
  • No Comment
  • 18

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் கூறியுள்ள தகவல் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜயகாந்த்
ரசிகர்களால் செல்லமாக கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் தனது கம்பீர நடிப்பினால் பல படங்களால் ரசிகர்களை கவர்ந்தவர். பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இவர் தேமுதிக கட்சி ஒன்றினை துவங்கி அரசியலில் கால் பதித்தார்.

ஒரு கட்டத்தில் எதிர்கட்சித் தலைவராகவும் அமர்ந்த இவர் சில ஆண்டுகளாக உடல்நிலை முடியாத காரணத்தினால் அரசியலில் இருந்து ஒதுங்கினார். சரியாக பேசவும், நடக்கவும் முடியாத இவருக்கு ஒரு நபரின் உதவியுடனே எங்கும் சென்று வருகின்றார்.

உடல்நல குறைவு காரணமாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே கட்சி நடவடிக்கைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார்.

விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு
இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலையின் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருக்கும் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், திரைப்பட நடிகராக இருக்கும் சண்முக பாண்டியன் ஆகிய இருவரும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.பின்பு செய்தியாளர்களை சந்தித்த போது, தந்தையின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த போது, அப்பாவின் உடல்நிலையில் பின்னடைவுதான். பழைய மாதிரி பேசுவதற்கும், நடப்பதற்கும் முயற்சி செய்து வருகின்றோம். இப்போதைக்கு நன்றாக இருப்பதாகவும், இந்த உடல்நிலையிலேயே 100 வயது வரை நன்றாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

கேப்டனின் மந்திரமே ‘முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது’ என சொல்லுவார். அதைதான் எங்களது தாரக மந்திரமாக எடுத்துள்ளோம் என்று தெரிவித்த விஜயபிரபாகரனின் பேச்சு ரசிகர்களை சற்று கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply