நிலவில் விழுந்து நொறுங்கிய ரஷ்யாவின் விண்கலம்

நிலவில் விழுந்து நொறுங்கிய ரஷ்யாவின் விண்கலம்

  • world
  • August 21, 2023
  • No Comment
  • 57

ரஷ்யாவின் லூனா – 25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

குறித்த விண்கலம் நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்குவதற்கு தயாராக இருந்த நிலையில், எதிர்பாராமல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுழன்று நிலவில் விழுந்ததாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லூனா – 25 விண்கலமானது 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவினால் நிலவுக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தோல்வியில் முடிந்த நிலவுப் பயணம்

ரஷ்யா விண்வெளி நிறுவனமான ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி – காஸ்மோட்ரோம் ஏவுதளத்திலிருந்து லூனா-25 என்ற விண்கலத்தை சோயுஸ் 2.1பி மூலம் விண்ணில் செலுத்தி இருந்தது.நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா 25 விண்கலம், திங்கட்கிழமை (21.08.2023) தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், நேற்றைய தினம் (19.08.2023) லூனா 25 இன் சுற்றுவட்டப்பாதையை குறைக்கும் போது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (20.08.2023) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லூனா – 25 நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் அறிவித்துள்ளது.

சந்திரயான்-3 மற்றும் லூனா 25 போட்டிஇந்தியாவின் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாகவே நிலவின் தென் துருவத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லூனா – 25 நிலவில் விழுந்து நொறுங்கி உள்ளது.

உறைந்த நீர் மற்றும் விலைமதிப்பற்ற பல கனிமங்கள் நிலாவில் உள்ளதாகக் கருதும் விஞ்ஞானிகள் அதன் ஒரு பகுதியை ஆராயவே இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென் துருவத்தில் ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற பெருமையை பெறும் திட்டத்துடன் களமிறக்கப்பட்ட ரஷ்யாவின் விண்கலம் திட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply