புலம்பெயர் மக்கள் தொடர்பில் கருணா-டக்ளஸ் முக்கிய சந்திப்பு

புலம்பெயர் மக்கள் தொடர்பில் கருணா-டக்ளஸ் முக்கிய சந்திப்பு

  • local
  • August 21, 2023
  • No Comment
  • 14

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு கடற்றொழில் அமைச்சில் இன்று(21.08.2023) நடைபெற்றுள்ளது.

கடற்றொழில் அமைச்சர், சர்வதேச சந்தைகளுக்கு கடலுணவுகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணிகளை பெற்றுக்கொள்வதுடன், கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினையும் வலுப்படுத்த முடியும் என்பதை அதிகாரிகள் மத்தியில் வலியுறுத்தி வருகின்றார்.

புலம்பெயர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு
புலம்பெயர் முதலீட்டாளர்களின் பங்களிப்பிற்கான கோரிக்கையை முன்வைத்து வருவதுடன் தனியார் முதலீட்டாளர்களுக்கான ஒத்துழைப்பினையும் ஊக்குவிப்பினையும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய குறித்த கலந்துரையாடலில், புலம்பெயர் மக்கள் மத்தியிலுள்ள முதன்மை முதலீட்டாளர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இந்த கலந்துரையாடலில் புலம்பெயர் நாடுகளை சேர்ந்த தனியார் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply