உக்ரைனில் வாக்னர் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியர்கள்! தொடரும் சிக்கல்

உக்ரைனில் வாக்னர் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியர்கள்! தொடரும் சிக்கல்

  • world
  • August 16, 2023
  • No Comment
  • 77
உக்ரைன் போர் சூழலில் பொதுமக்களுக்கு உதவும் பொருட்டு களமிறங்கிய பிரித்தானிய ஊழியர்கள் இருவர் ரஷ்யா அல்லது வாக்னர் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பிரித்தானியர்கள் இருவரும் பக்மூத் பிராந்தியத்தில் பொதுமக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இருவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
இதனை தொடர்ந்து இருவரின் ஆவணங்களையும் வாக்னர் கூலிப்படையினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.பிரித்தானிய உள்விவகார அமைச்சகம் வெளியிட்ட தகவல் 
பிரித்தானிய உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், மனிதாபிமான உதவிகள் மேற்கொண்டுவந்த இரு பிரித்தானியர்களும் கொல்லப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.
 
மேலும், பிரித்தானியர்கள் இருவரும் சண்டையில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப்படையினரால் இருவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.பிரித்தானியர்கள் இருவரும் கொல்லப்பட்ட விவகாரம் போர் குற்ற நடவடிக்கை என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பம் தெரிவித்துள்ளது
 
மேலும், போர் குற்றம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை முன்னெடுக்கும் பொருட்டு, 1.3 மில்லியன் பவுண்டுகள் நிதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.  

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply