இலங்கையில் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

இலங்கையில் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 91

இலங்கையில் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போருக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம்  (இலங்கை) விடுத்துள்ளது.

அதாவது விமான நிலைய சுற்றி சுமார் 5km சுற்றுவட்டத்தில் வசிப்போருக்கு பட்டம் விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவித்தல் முக்கியமாக இலங்கையில் இயங்கும் 5 விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ளது.

பாரிய சேதங்களை விளைவிக்கும் சாத்தியம்

அவையாவன, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், யாழ் சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு சர்வதேச விமான நிலையம் ஆகும்.மேற்குறிப்பிடப்பட்ட விமான நிலைய சுற்றுப்பரப்பினுள் பட்டம் விடுவதன் காரணமாக விமான ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வேளைகளில் பட்டங்கள் விமான விசிறிக்குள் சிக்கும் பட்சத்தில் அவை பாரிய சேதத்தை விளைவிக்க வாய்ப்பு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply