“போர் தொழில் வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன் ஆனால் அது எனக்காக அல்ல”- இயக்குநர் விக்னேஷ் ராஜா

“போர் தொழில் வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன் ஆனால் அது எனக்காக அல்ல”- இயக்குநர் விக்னேஷ் ராஜா

  • Cinema
  • August 3, 2023
  • No Comment
  • 45
'போர் தொழில்' படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து இயக்குநர் விக்னேஷ் ராஜா ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

சமீபத்தில் வந்த த்ரில்லர் திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த படம், ‘போர் தொழில்’.

இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிகிலா விமல் கதாநாயகியாக நடித்திருந்தார். நீண்ட நாட்கள் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம் , ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றிருக்கிறது.

படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து இயக்குநர் விக்னேஷ் ராஜா ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “ போர் தொழில் படத்தின் ரிலீஸின்போது நான் தூக்கமில்லாமல் இருந்தேன். நாங்கள்  சிறந்த படத்தைதான் எடுத்திருக்கிறோம் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அது எனக்காக அல்ல.

என்னுடைய படத்தின் தயாரிப்பாளருக்காகக் காரணம் என்னை நம்பி பணம் கொடுத்து பொருளாதார ரீதியாக ரிஸ்க் எடுத்திருக்கிறார். படத்தில் நடித்த அனைவரும் பல மாதங்கள் மிகப் பெரிய உழைப்பை செலுத்தினார்கள்.  ‘போர் தொழில்’ குறிப்பிட்டத் தொகையை வசூலிக்க வேண்டும் அதை அவர்களுக்கு காட்ட வேண்டும் என நினைத்தேன்.படம் திரையரங்குகளில் வெளியாகி இன்று 50- வது நாளை எட்டியிருக்கிறது. பாக்ஸ் ஆஃபீஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. எந்த ஸ்பாய்லர்ஸையும் பரப்பாமல், படத்தைக் கொண்டாடி வெற்றிபெறச் செய்த ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், பார்வையாளர்கள் என அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.    

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply