மின் கட்டணத்தைஅதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை திட்டம்

மின் கட்டணத்தைஅதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை திட்டம்

  • local
  • January 2, 2026
  • No Comment
  • 21

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்திற்கமைய அதனை 06 புதிய நிறுவனங்களின் கீழ் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் முறையாக 06 புதிய நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால கருத்து தெரிவிக்கையில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு எழுத்து மூலமாக இது தொடர்பான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த நிறுவனங்களுக்கு ஊழியர்களை பரிந்துரைக்கும் நடவடிக்கை ஏற்கனவே நிறைவடைந்துள்ளதுடன் இது தொடர்பில் விருப்பமற்றவர்களுக்கு தமது விருப்பத்திற்கமைய ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 2173 ஊழியர்கள் ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளனர்.

ஓய்வு பெற விரும்பும் ஊழியர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்திற்குள் நிறைவு செய்யப்படுமென, வலுசக்தி அமைச்சினால் மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் நிறைவில் இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு முடிவுறுத்தப்படுவதுடன் அதன் பின்னர் அதன் நடவடிக்கைகள் புதிய 06 நிறுவனங்களின் கீழ் நடாத்திச் செல்லப்படவுள்ளன.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…