நைஜரிலிருந்து பிரான்ஸ் பிரஜைகள் வெளியேற்றம்

நைஜரிலிருந்து பிரான்ஸ் பிரஜைகள் வெளியேற்றம்

நைஜர் நாட்டில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் போராட்டங்கள் வலுப்பெற்று வருவதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அதன் குடிமக்களை அங்கிருந்து வெளியேற்ற தொடங்கியுள்ளது.

260 பேருக்கும் மேற்பட்ட பிரான்ஸ் குடிமக்களை ஏற்றிக் கொண்டு, அந்நாட்டின் தலைநகரமான நியாமியில் இருந்து முதல் விமானம் இன்று(02.08.2023)புறப்பட்டுள்ளது.பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் குடிமக்களைக் கொண்ட அந்த விமானம், இன்று பாரிசில் தரையிறங்கியுள்ளது.

மக்களை காப்பாற்றும் முயற்சி

நைஜரின் வான்வெளி மூடப்பட்டதுள்ளதால், அந்நாட்டில் தமது மக்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுவதாக பிரான்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது.

எஞ்சியிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்களை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், நியாமியிலுள்ள விமான நிலையத்திற்குச் செல்லும்படியும் பிரான்ஸ்அரசாங்கம் தமது குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.இத்தாலியும் அதன் குடிமக்களை நைஜர் நாட்டில் இருந்து வெளியேற்றி வருகிறது. 36 இத்தாலியர்களையும், 21 அமெரிக்கர்களையும், ஒரு பிரிட்டிஷ் நாட்டவரையும் ஏற்றிச் சென்ற விமானம் இன்று காலை ரோம் நகரைச் சென்றடைந்துள்ளது.


Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply